இஸ்லாமிய நண்பரின்
கேள்வி--
ஏசு சிலுவையில்
அறையப்பட்ட நேரம் எது
உண்மை??
மாற்கு 15: 25,
சிலுவையில் அறைந்த
நேரம் மூன்றுமணி.
யோவான் 19: 14 இல்
ஆறுமணிக்கு
விசாரணை நடந்தது.
மூன்றுமணிக்கு
சிலுவையில்
அறையப்பட்டவரை? ??
ஆறுமணிக்கு எப்படி
விசாரித்தார்கள்???
மத்தேயு 27:45,
மாற்கு 15:
33-34,
லூக்கா 23:44 லும்
ஆறுமணிக்குத் தான்
சிலுவையில்
தொங்குகிறார்
உங்கள்
ஏசு.
இன்னும் அதிகமாகவே
வருகிறது ஒவ்வொரு
சம்பவத்திலும்
முரண்பாடு.
எமது பதில்--
நண்பரே வேதத்தில்
உள்ளதை நீர் சரியாக பதிய
வேண்டும். இயேசுவை
சிலுவையில் அறையும்
போது மூன்று மணி
என்று வேதாகமத்தில்
இல்லை. மூன்றாம் மணி
வேளை என்றே உள்ளது.
"மூன்று மணி" என்பது
வேறு, "மூன்றாம் மணி
வேளை" என்பது வேறு.
அதாவது "மூன்று மணி"
என்பது சாதாரணமான
மூன்று மணியை
குறிக்கும்.
"மூன்றாம்
மணி வேளை" என்பது
காலை 9 மணியாகும்.
எவ்வாறெனில யூதர்கள்
24மணித்தியாலங்களின்
பகல் வேளையை- முதலாம்
மணி வேளை> இரண்டாம்
மணி வேளை என்று
பன்னிரண்டு மணி
வேளைகளாக
பிரித்துள்ளனர்.
அதாவது
முதலாம் மணி வேளை =
6 to 7 am
இரண்டாம் மணி வேளை =
7 to 8 am
மூன்றாம் மணி வேளை =
8 to 9 am
நான்காம் மணி வேளை =
9 to 10 am
ஐந்தாம் மணி வேளை =
10 to 11 am
ஆறாம் மணி வேளை =
11 to to 12 pm
ஏழாம் மணி வேளை =
12 to 1 pm
எட்டாம் மணி வேளை =
1 to 2 pm
ஒன்பதாம் மணி வேளை =
2 to 3 pm
பத்தாம் மணி வேளை =
3 to 4 pm
பதினோராம் மணி வேளை = 4 to 5 pm
பன்னிரண்டாம் மணி வேளை = 5 to 6
pm
வேதத்தில் 'மணிவேளை"
என கூறப்படும் இடங்களை
இந்த கணிப்பை வைத்தே
அறிந்து கொள்ள
வேண்டும். அதாவது
மூன்றாம் மணிவேளை
என்பது காலை 8 மணி
தொடக்கம் 9 மணி
வரையான நேரத்தை
குறிக்கும்.
இப்போது
கூட்டி கழித்து பாரும்
கணக்கு சரியாக வரும். நீர்
வேதாகமத்தை பற்றி
அறிந்திருப்பது மிக
மிக மிக சொற்பம் என்பது
உமக்கு தெரிய வரும்...
இப்போது நீர்
கொடுத்துள்ள ஒவ்வொரு
வசனத்துக்கும் விளக்கத்தை
தருகிறேன் தெரிந்து
வைத்துக் கொள்ளும்.
யோவா-19:14 அந்த நாள் பஸ்காவுக்கு
ஆயத்தநாளும் ஏறக்குறைய
ஆறுமணி
நேரமுமாயிருந்தது.
('ஆறாம் மணி" அல்ல
'ஆறுமணி")
அப்பொழுது அவன்
யூதர்களை நோக்கி:
இதோ> உங்கள் ராஜா
என்றான்.
இவ்வசனத்தின்படி இயேசு
விசாரணைக்காக
ஒப்புக்கொடுக்கப்படும்
போது காலை 6 மணி
மாற்-15:25 அவரைச் சிலுவையில்
அறைந்தபோது
மூன்றாம்மணி
வேளையாயிருந்தது.
('மூன்று மணி' அல்ல
'மூன்றாம் மணி')
இவ்வசனத்தின்படி காலை 9
மணியளவில் இயேசு
சிலுவையில்
அறையப்பட்டார்
மத்-27:45 ஆறாம்மணி நேரமுதல்
ஒன்பதாம்மணி
நேரம்வரைக்கும்
பூமியெங்கும் அந்தகாரம்
உண்டாயிற்று.
மாற்-15:33 ஆறாம்மணி நேரமுதல்
ஒன்பதாம்மணி
நேரம்வரைக்கும்
பூமியெங்கும்
அந்தகாரம் உண்டாயிற்று.
லூக்-23:44 அப்பொழுது ஏறக்குறைய
ஆறாம்மணி
நேரமாயிருந்தது
ஒன்பதாம்மணி
நேரம்வரைக்கும்
பூமியெங்கும்
அந்தகாரமுண்டாயிற்று.
இவ்வசனங்களின்படி 12
மணி முதல் மாலை 3
மணி வரை
பூமியெங்கும் இருள்
சூழ்ந்தது.
மாற்-15:34. ஒன்பதாம்மணி நேரத்திலே
இயேசு: எலோயீ! எலோயீ!
லாமா சபக்தானி என்று
மிகுந்த சத்தமிட்டுக்
கூப்பிட்டார் அதற்கு: என்
தேவனே! என் தேவனே! ஏன்
என்னைக் கைவிட்டீர் என்று
அர்த்தமாம்.
இவ்வசனத்தின்படி மாலை 3
மணியளவில் இயேசு
மரணமடைந்தார் .
சுருக்கமாக கூறுகிறேன்
1. இயேசு விசாரணைக்காக
ஒப்புக்கொடுக்கப்படல் –
காலை 06 மணி
2. இயேசு சிலுவையில்
அறையப்படல் –
காலை 09
மணி
3. பூமியெங்கும் அந்தகாரம்
உண்டாதல் – மதியம் 12 மணி
முதல் மாலை 3 மணி
வரை
4. இயேசு மரணமடைதல் –
மாலை 03 மணி
இப்போது புரிந்ததா?
வேதாகமம் இவ்விடத்தில்
எந்த தவறும்
செய்யவில்லை.