1. இயேசு வெளிப்படுகிறார் - தொடர்கிறது
1.2. இயேசுவின் கை
"அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின்
சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று: எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா
கண்டான்."
(தானியேல் 5:5)
தானியேல் 4 ஆம் அதிகாரத்திலே நேபுகாத்நேச்சாரின் இதயத்தில் மேட்டிமை
சிந்தை வந்து அவனுக்கு பரலோக தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.
அந்நேரத்திலே இப்படிப்பட்ட ஒரு வெளிப்படுத்தல் அவசியமாயிற்று. இந்த
இடத்திலே வெளிப்படும் கரம் இயேசுவின் கரம் என்றே சொல்லப்படுகிறது.
1.3. இயேசு மனுஷ குமாரனாயிருக்கிறார்
"இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷ
குமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்.
அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில்
கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும் பாசைக்காரரும் அவரையே
சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும்
கொடுக்கப்பட்டது அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும்,
அவருடைய ராஜ்யம்
அழியாததுமாயிருக்கும்." (தானியேல் 7:13-14)
மனுஷ குமாரனின் சாயலில் வேறு யாருமே
இல்லாததினால் தானியேல் இங்கு காண்பது மனுஷ குமாரனாகிய கிறிஸ்து என்பதில்
சந்தேகமே இல்லை.
தானியேல் மனுஷ குமாரனை குறித்து தீர்க்கதரிசன வசனங்கள் மூலம் அறிந்து
நேராக கிறிஸ்துவை காணவில்லை. ஏனெனில் வானத்து மேகங்களுடன் வருபவர்
கிறிஸ்து அல்லாமல் மற்ற யாருமே அல்ல என்று தானியேல் நன்றாக அறிந்து
இருந்தார்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்து மேகங்களில் மறைவாக சென்றதாக அப் 1:9-11 இலே
வாசிக்கின்றோம். இங்கே குமாரன் பிதாவின் அருகில் செல்வதையும், பிதா
குமாரனை தம் அருகில் கொண்டு வருவதையும் பார்க்கின்றோம். மேலும் இங்கு
பிதா குமாரனில் இருக்கும் பெரிய தொடர்பை நாம் காணலாம்.
1.4. மேசியா
இப்போதும் நீ அறிந்து உணர்ந்து
கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்
கட்டுகிறதற்கான கட்டளை
வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும்,
அறுபத்திரண்டு வாரமும் செல்லும் அவைகளில் வீதிகளும் அலங்கங்களும்
மறுபடியும் கட்டப்படும் ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
(தானியேல் 9:25)
இந்த வேதப்பகுதியிலே பிரபுவாகிய மேசியாவைக் குறித்தே சொல்லப்படுகிறது.
யார் இந்த பிரபுவாகிய மேசியா? கண்டிப்பாக இயேசுக்கிறிஸ்து தான்.
இதற்கு ஆதாரமாக சமாரிய ஸ்திரியும் இயேசுவும் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளை
(யோ 4:25- 26) போன்ற பகுதிகளில் இருந்து பார்த்தால்
"அந்த ஸ்திரி அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார்;
என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்
என்றாள்.
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
1.5. தூதன்
"என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில்
ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்.
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து,
நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற
விழுந்துகிடந்தேன்." (தானியேல் 10:5-8)
தானியேல் இந்த இடத்தில் காண்பதும் இயேசுவையே..
இந்த இடத்திலே தூதன் என்று சொல்லப்பட்டாலும் இதே போல இயேசுவானவர்
கர்த்தரின் சேனைகளின் தளபதியாக யோசுவாவின் காலத்தில் உருவிய பட்டயத்தோடு
காட்சியளிக்கிறார்.
மேலும் இங்கு கூறப்படும் அநேக ஒப்புவமைகள் வெளிப்படுத்தலிலும் இயேசுவை
குறித்து சொல்லப்படுகையிலே குறிப்பிடப்படுகிறது.
''அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும்
வெண்மையாயிருந்தது: அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது. (வெளி 1)