கிறிஸ்துவர்கள் மறு மணம் செய்யலாமா? விவாகரத்து ஆனபின் மறுமணம் செய்யலாமா? வேதாகமம் என்ன சொல்கிறது?

விவாகரத்தும் மறுமணமும்

கணவனோ மனைவியோ இறந்துபோனபின்பு மறுமணம் செய்து
கொள்ளலாம்.

ஆனால் விவாகரத்து
ஆனபின் திருமணம் செய்யலாமா என்றால், பதில் அழுத்தம் திருத்தமாக
இல்லை!

இதைக்குறித்து அநேகர் விவாதங்கள் எழுப்புகிறார்கள், சில போதகர்களும்
தவறாக சொல்கின்றார்கள். எனவே இதைக்குறித்து திட்டவட்டமாக தியானிப்போமாக.

சிலர் சொல்கின்றார்கள் "ஒரு மனிதனின் வாழ்க்கைத்துணை (கணவனோ/மனைவியோ) தன்
மேல் எந்த பிழையும் சுமத்தாமல் தன்னைவிட்டு
போய்விட்டால் தான் மறுமணம் செய்து
கொள்ளலாம்.
ஏனெனில் என்மேல் எந்த பிழையும் இல்லையே."

ஆனால்ரோமர் 7:2,3ல்தேவனுடைய வசனம் என்ன சொல்லுகின்றது:

"அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்கு
மளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு
உட்பட்டிருக்கிறாள்;

புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை
விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள்
அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்
பண்ணினாலும் விபசாரியல்ல."

இங்கே தன்னுடைய துணை உயிரோடிருக்கும்போது மறுமணம் செய்ய
எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறோம்.

சிலர் நொண்டிச் சாக்குகளை சொல்லிமறுமணம் செய்வதால்விபசாரம் என்னும்
பாவத்திற்குள்ளாகின்றார்கள்.

அப்படிப்பட்ட தம்பதியினர் தங்களுடைய பாவத்திற்காக மனங்கசந்து மனம்
திரும்பாவிட்டால், மிகவும் கடினமான தண்டனையும் நியாயத்தீர்ப்பையும்
அடைவார்கள்.

விவாகரத்தானபின்பு மறுமணம் செய்வதை ஆதரிப்பவர்கள் சொல்வது என்னவெனில்:

ஒரு மனைவி (அல்லது கணவன்) விபசாரம் செய்தால் கணவன் விவாகரத்து செய்து
மறுபடியும் திருமணம் செய்யலாம் என்று இயேசு சொன்னாரே!

அப்படியாக இயேசு சொல்லவில்லை.

அவர் சொன்னது: "ஆதலால், எவனாகிலும் தன் மனைவி
வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை
விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்;
தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்
என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 19:9)" .

விபசாரம் (adultery) என்பது திருமணத்திற்குப் பின்பு பாலியல் உறவு.

வேசித்தனம் (fornication) என்பது திருமணத்திற்குப் முன்பு பாலியல் உறவு.

பழைய ஏற்பாட்டில் இதை "கன்னிமை"
காணப்படாவிட்டால் என்ற பதத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

கிரேக்க அகராதியிலும் வேசித்தனம் (porneia -πορνεῖαι) என்பது
விபசாரத்திலிருந்து (moikeia -μοιχεῖαι) வேறுபட்டது என்று
உறுதிசெய்கின்றது.

பழைய ஏற்பாட்டில் மோசே:

ஒருவனுடைய மனைவி
விபசாரம் செய்தால் தள்ளுதற்சீட்டு கொடுத்துவிடலாம் என்று சொல்லவில்லை.

லேவியராகமம் 20:10ல்
"ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம்
செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை
செய்யப்படக்கடவர்கள்".

இதுதான் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளை. மேலும் பழைய ஏற்பாட்டில்,
மல் 2:16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை
மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள்
துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்று
தேவன் சொன்னார்.

மத் 19:9ல் ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் கொடுக்கபட்டுள்ளது.

அதாவது

"வேசித்தனம்" என்னும் ஒரு காரியத்தினிமித்தம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம்.

வேதத்தில் ஒருவள் ஒருவனுக்கு
நியமிக்கப்பட்டிருக்கும்போதே அவள் அவனுடைய மனைவி என்று அழைக்கப்பட்டாள்!!

இதற்கு நிரூபணமாக யோசேப்பு-மரியாள் என்பவர்களைக் குறித்த வசனத்திலிருந்து
சொல்லலாம்.

மத்தேயு 1:18-20 அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு
நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த
ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன்
இப்படிச் சிந்தித்து
க்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக்
காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய
யோசேப்பே,உன் மனைவியாகிய மரியாளைசேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில்
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

இங்கே திருமணத்திற்கு முன்பே அவள் அவனுடைய மனைவி என்று அழைக்கப்பட்டாள்.

எனவே நிச்சயம் செய்யப்பட்ட பெண்/ஆண் வேசித்தனம் செய்தால் தள்ளுதற்சீட்டு
கொடுத்துவிடலாம், அதாவது நிச்சயத்தை ரத்துசெய்யலாம்.

உபாகமம் 22:23-24. கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு
நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே
சயனித்தால், அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும்
கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக்
கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன்
கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை
உன் நடுவிலிருந்து
விலக்கக்கடவாய்.

லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை
விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை
விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.

கலா 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல்,
நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை
உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்ட
வனாயிருக்கக்கடவன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.