8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ளகர்த்தர்:
நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று
திருவுளம்பற்றுகிறார்.
9. உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற
உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள்
உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
விளக்கம்:-
வச.8 - அல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழூத்து ஆகும்.
ஒமேகா என்பது கிரேக்க மொழியின் கடைசி எழுத்து ஆகும்.
எல்லா எழுத்துருக்களும் அவரே. எழுத்துக்களாலேயே வார்த்தைகளும்
வார்த்தைகளின் பகுதிகளும் உருவாக்கப் படுகின்றன.
எனவே "அறிவு, ஞானம் ஆகியவற்றின் தொடக்கமும் நிறைவும் நானே" என்று தேவன்
கூறுகிறார். இது அவர் எல்லாவற்றையும் அறிந்த தேவன் என்பதை விளக்குகிறது.
ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் என்பது "எப்பொழுதும் இருக்கிறவர்" என்று
பொருள்படும்.
ஆதி அந்தம் என்பது தொடக்கமும் முடிவும் எனப் பொருள் படும் வார்த்தை ஆகும்.
தேவனுக்கு தொடக்கமும் முடிவும் உண்டா?
இந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதே ஆகும். வசனம் எதை கூறுகிறது என்றால்
இந்த உலகத்தை உருவாக்கினவரும் (தொடங்கினவர்) முடிக்கிறவரும் நானே என்பதை
கூறுகிறது. தேவனுக்கு தொடக்கம் முடிவு என்பது கிடையாது.
இந்த 8ஆம் வசனம் மற்றும் 21:5-6 வசனங்கள் பிதாவாகிய தேவனை குறிக்கிறது.
வச.9 - A). இயேசுவுக்கு அன்பான சீடனாகிய யோவான் நாடு கடத்தப்பட்டு
பாறைகள் நிறைந்த பத்மு தீவில் வைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய கொடிய
பாடுகளின் மத்தியிலும் அவர் ஜெபத்தில் கர்த்தரோடு ஒன்றியிருந்தார்.
B). கிறிஸ்துவர்களை கொடுமை படுத்தும் காலத்தில் தைரியமாக ஊழியம் செய்து
தன்டனை பெற்றிருந்தார் யோவான்.
கம்யூனிச நாடுகளில் இவ்வாறு பாடுபட்ட போதிலும் தொடர்ந்து ஊழியம்
செய்தவர்களை பற்றி நாம் அறிவோம்.
இன்றும் எதிர்ப்புகளின் மத்தியிலும் ஊழியம் செய்யும் அநேகர் பாடுகளை
அனுபவிக்கின்றனர்.
கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தம் ஒவ்வொரு ஆண்டும் 1,60,000 இற்கும்
அதிகமானோர் கொலை செய்யப்படுகின்றனர்.
பல லட்டசம் மக்கள் துண்பப்படுத்த படுகின்றனர்.
இவர்களுக்காகவும் இவர்களது குடும்பங்களுக்காகவும் ஜெபிப்பது நமது கடமை.
எதிர்ப்புகள் மத்தியிலும் பாடுகள் மத்தியிலும் ஊழியம் செய்கிறவர்கள்
இருக்கும் பொழுது எதிர்ப்புகளும் பாடுகளும் இல்லாதவர்கள் ஊழியம்
செய்யாமல் இருப்பது சரியன்று.
இன்றிலிருந்தேனும் ஆத்தும ஆதாயம் செய்ய தொடங்குவோமாக.
வேத வசனத்திற்காகவும் இயேசுவை குறித்த சாட்சிகாகவும் யோவான்
தொல்லைகளுக்கு உள்ளானது போன்று பாடுபட்டு இரத்த சாட்சியாய் மரித்த அநேகரை
6:9 காண்கிறோம்.
வேத வசனத்திற்காகவும் இயேசுவுக்காகவும் இரத்த சாட்சியாக மரிக்க நீர் ஆயத்தமா.....?
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. -(Pr.Charles MSK) வெளி 1 அதிகாரம் வசனங்கள் 8-9
0
April 05, 2016
Tags