தேவனை உயர்த்தி, உலகப் பொருளை காலின்கீழ் வைத்திடுங்கள்! - சகரியா பூணன்

தேவனுக்கு நேர் இணையான எஜமான் பணம் அல்லது உலகத்தின் ஐசுவரியம் என ஆண்டவர்
லூக்கா 16:13- ம் வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தினார்.

அந்த எஜமானை 'சாத்தான்' என ஆண்டவர் குறிப்பிடவில்லை. ஏனென்றால், தேவனை
நேசிக்கும் அதே நேரத்தில்சாத்தானையும் நேசிக்கும்அபாயத்தில் இயேசுவின்
சீஷர்களில் ஒருவராகிலும்
இருப்பதில்லை!

ஆனால் இந்த சீஷர்களுக்கு
உலகத்தை நேசிக்கும்
அபாயமோ எப்போதும் இருக்கத்தான் செய்கிறது!!

நாம் இந்த உலகத்தில் வாழும் காலமெல்லாம் ஒவ்வொருநாளும் பணத்தை கையாள
வேண்டியதாயிருக்கிறது. இயேசுவின் சீஷர்களாகிய நாம் கவனமாயிராவிட்டால்,
தேவனையும் நேசித்து அதேசமயத்தில் உலகப்பொருள்களையும் நேசிக்கும்
அபாயத்தில்
சிக்கிக் கொள்ள முடியும்!

நாம் ஆண்டவரின் சீஷர்களாய் இருக்கும் பாக்கியத்தை
பறித்துக்கொண்டு பணம் நம்மை மிக எளிதில் வளைந்து பற்றிக் கொள்ள முடியும்.
ஆகவேதான், நாம் எவ்வாறு சாத்தானைக் குறித்து சாதகமான மனப்பான்மை
வைத்திருக்க முடியாதோ அதேபோல, பணத்தின் மீதும் ஓர் சாதகமான மனப்பான்மை
நாம் வைத்துக் கொள்ளவே முடியாது.

ஒன்று, ஆண்டவர் இயேசுவின் சீஷர்களாய் இருந்திட வேண்டும்! அல்லது
உலகப்பொருள்களின் சீஷர்களாய் நாம் இருந்திட வேண்டும்!!

ஆம், இந்த
இரண்டிற்குமிடையே சீஷர்களாய் நாம் ஒருபோதும் இருந்திட முடியாது!!
நம்முடைய நோக்கம் தேவனைப்
பிரியப்படுத்துவதாய்
இருக்க வேண்டும். . . அல்லது நம்முடைய நோக்கம் பணத்தைப்
பிரியப்படுத்துவதாய்
இருக்க வேண்டும், அவ்வளவுதான்!

ஏனெனில், இந்த இரண்டும் ஒரு காந்தத்திற்கு வடதுருவம் தென்துருவம் போலவே
எதிரும் புதிருமாய் இருக்கிறது. நாம் மெய்யாகவே தேவன்பால்
ஈர்க்கப்பட்டவர்களாய் இருந்தால், பணத்தை விட்டு தூர விலகி நிற்போம்!

தேவனை முழுவதுமாய் நேசிக்க வேண்டுமென்றால், உலகப்பொருட்களை முற்றிலுமாய்
வெறுத்தே ஆக வேண்டும். ஒன்று, "இயேசு கூறிய இந்த சத்தியம் மெய்தான்" என
நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது 'இயேசு பொய் சொல்லுகிறார்' என அவரை
நீங்கள் குற்றப்படுத்த வேண்டும்.

பணத்தை அசட்டை செய்வதின் பொருள், 'நாங்கள் பணத்திற்காக கவலை கொள்ள
மாட்டோம்!' என்பதுதான். நாம் அதை உபயோகப்படுத்துகிறோம். . . ஆனால்
பணத்தோடு பிடிப்பு கொண்டிருப்பதில்லை!

பரலோகத்தின் வீதிகள் தங்கத்தால்
செய்யப்பட்டிருக்கிறது! இந்த பூமியிலோ, தங்கத்தை தலைக்கு மேல் உயர்த்தி
வைத்திருக்கிறார்கள்! . . .

ஆனால் பரலோகத்திலோ இதே தங்கம் நம் பாதத்திற்கு கீழாய்
வைக்கப்பட்டிருக்கும்!! இந்த பூமியிலிருக்கும்போதே
தங்கத்தை தங்கள் கால்களுக்கு கீழாய் வைத்திருக்க
கற்றுக்கொண்டவர்களுக்காகவே பரலோகம் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.