ரூத்தின் கதையானது இவ்விரு மக்களிடயே நட்பான சூழல் காணப்பட்டதை
காட்டுகிறது. ரூத்தின் வம்சத்தில் பின்னர் தாவீது அரசன் பிறப்பதனால்
தாவீது மோவாபிய இரத்தை தன்னுள் கொண்டிருந்தார் என கூறமுடியும். தாவீது
சவுல் அரசனால் கொலை செய்ய தேடப்பட்டப் போது தனது பெற்றேரை கவனித்துக்
கொள்ளூம் பொறுப்பை ஒரு மோவாபிய அரசனிடன் கொடுத்தார். ஆனால் நட்பு
அத்துடன் முடிவடைகிறது, அடுத்த முறை மோவாபியரை பற்றி விவிலியத்தில்
குறிப்பிடும் போது தாவீது மோவாபிய பிரதேசத்துக்குள் யுத்ததுக் போகிறார்.
பபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து எருசலேமுக்கு வந்த இஸ்ரவேலரிடையே
பாகாத் மோவாப் என்பருடைய சந்த்தியினரும் காணப்பட்டார்கள் இப்பெயர்
"மோவாபின் ஆளுனர்" என பொருள் படும், எனவே பபிலோனிய அடிமைத்தந்த்துக்கு
முன்னர் மோவாப் இஸ்ரவேலின் ஒரொ பிரதேச அரசாக ஆளுனர் மூலம் ஆட்சி
செய்யப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.
மோவாபின் தலைந்கரம் கிர்-அசேத் என்பது இன்றைய கெராக்நகரமாகும்.
சுதந்திரம்:-
கிமு 850 ஐசேர்ந்த மேசா கல்வெட்டு
ரெகொபெயாம் ஆசியின் போது இஸ்ரவேல் இராச்சியம் இரண்டாக பிரிந்த்தபோது,
மோவாப் வடக்கு இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்ந்து
இஸ்ரவேல் இராச்சியத்தின் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.
அனால் ஆகாப் என்ற இஸ்ரவேலின் அரசன் மரித்த பின்பு மோவாப் கப்பம்
கட்டுடத்தல் நிறுத்தி யூதா இராச்சியம்மீது படையெடுத்தது.
ஆகாப் அரசனின் மரணத்துகுப் பிறகு, மேசாஎன்பவரின் தலைமையில் மோவாபியர்,
யெரொபெயாம் அரனுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள். இதன் போது யெரொபயாம்
யூதா இராச்சியத்தின் அரசனையும் ஏதோம் இராச்சியத்தின் அரசனையும்
சேர்த்துக் கொண்டு மோவாபியருடன் யுத்தத்துக்கு தயாராக சிஸ் என்ற இடத்தில்
காத்திருந்த்தார்கள்.
அப்போது விவிலியத்தின் படி, எலிசா என்ற தீர்க்கதரிசியின் கட்டளைப்படி
அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே பல வாய்காள்களை வெட்டினார்கள்.
இரவில் அற்புதமாக அவை நீரால் நிரம்பின. காலை செங்கதிர் அதன் மீது
பட்டுத்தெறித்தபோது அதை இரத்தம் என் மோவாபியர் நினைத்தனர்.
மேலும் கூட்டு சேர்ந்து வந்தவர்கள் தங்கலுக்குள் யுத்தம் செய்து மடிந்து
விட்டார்கல் என முடிவு செய்து யுத்ததுக்கு ஆயத்த மற்றவரா உ முன்னோக்கி
நகர்ந்தனர். பின்பு கூட்டுப் படைகளின் திடிர்தாக்குதல்களில் சிக்கி
தோல்வியை கண்டனர்.
ஆனால் மேசாவின் கல்வெட்டு இப்போரில் மோவாபியர் இஸ்ரவேலை வெற்றிகொண்டு
இஸ்ரவேலர் மோவாபிடமிருந்து ஆக்கிரமித்த சகல பிரதேசங்களையும்
கைப்பற்றியதாக கூறுகின்றது.
சிஸ் யுத்தமானது மோவாபியர் பற்றிய முக்கியமான விவிய குறிப்புகளில்
கடைசியாகும். அதன் பின்னர் சில இடங்களில் மோவாப் பற்றி
கூறப்பட்டுள்ளத்து. ஆனால் இவை மோவாப்பை பற்றிய செறிவான தகவல்களை
கூறவில்லை.
அழிவு:-
பாரசீக இராசியதின் காலத்தில் மோவாப் பற்றிய சகல தகவல்களில்லாது
போகின்றது. பல போர்களின் மூலம் மோவாப் வட அரபியாவில் இருந்து வந்த
மக்களால் கைப்பற்றப்படுகிறது. மேலும் அதன் பிறகு இஸ்ரவேல் மீதான
படியெடுப்பின் போது அம்மோனியரின் கூட்டாளியாக மோவாபிரை குறிப்பிடாமல்
அரபியர் என விவிலியம் குறிப்பிடுகிறது.
மோவாபியர் அழிந்தாலும் அதன் பின் நீண்ட காலத்துக்கு மோவாப் என்ற
இடப்பெயர் விவிலியத்திம் மூலம் அழியாது காணப்பட்டது.
பொருளாதாரம்:-
மோவாப் பல இயற்கை வள்ங்களை கொண்டிருந்த்து. முக்கியமக சலவைகல், உப்பு,
போன்றவை சாக்கடல் பிரதேசத்தில் கிடைத்தன. மேலும் மோவாப் அன்றைய எகிப்து,
சிறியா, மெசொப்பொத்தேமியா, அனடோலியா என்பற்றை இணைத்த முக்கிய வணிக
பாதையில் அமைந்திருன்ந்த்து. இப்பாதை மோவாபுக்கு பெருமளவு வரிகளை
கொடுத்தது.
சமயம்:-
மோவாபிய சமயம் பற்றிய தகவால்கள் அறிது. அவர்கள் பல்-கடவுள்களை
வழிபட்டிருக்கலாம் அவகள் பல வேலைகளில் இஸ்ரவேலரை தங்களது பலிகளில் சேரும்
படி தூண்டீயிருக்கின்றனர். அவர்கள்து தலைமை கடவுள் "கோமோசு" ஆவார் இதனால்
இஸ்ரவேல சிலவேலைகளில் மோவாபியரை "கேமோசின் மக்கள்" என அழைத்தனர்.
சில நேரங்களில் மனித பலிகளும்கொடுக்கப்பட்டன. மேசா தனது மகனை
பலியிட்டார். மேசா கல்வெட்டின் 17 ஆவது வரியில் கோமோசு கடவுளின் பெண்
துணைக் கடவுள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்:-
1. 2 அரசர் 3:
2. ஆதியாகமம் 19:37
3. Verhandlungen des Zwölften Internationalen
Orientalisten-Congresses,p. 261, Leyden, 1904
4. எசேக்கியேல் 25:9-10, ஏசாயா 15:- ஏசாயா 16:, யேரேமியா 48:
5. உபாகமம் 34:1-8
6. ரூத் 1:1-2
7. உபாக்கமம் 1:5, உபாக்கமம் 32:49
8. எண்ணாகமம் 22:1
9. நீதிபதிகள் 3:12-13, நாளாகமம் 20:22, ஏசாயா 11:14, யெரேமியா 26:21
10. உபாகமம் 2:11
11. எண்ணாகமம் 21:13, நீதிபதிகள் 11:08
12. நீதிபதிகள் 3:12-30
13. 1 சாமுவேல் 22:3-4
14. 2 சாமுவேல் 8:2, 1 நாளாகமம் 18:2,
15. நாளாகமம் 22:1
16. 2 நாளாகமம் 20:, 2 அரசர் 3:
17. நெகேமியா 4:7
18. I மக்கபே 9:32-42; யோசபஸ், யூத வரலாறுxiii. 13, § 5; xiv. 1, 4.
19. எண்ணாகமம் 25:2, நீதிப்பதிகள் நூல் 10:6
20. யேரேமியா 48:7,13
21. எண்ணாகமம் 21:29, யேரேமியா 48:7,13
22. 2 அரசர் 3:27