இறுதி நியாயத்தீர்ப்பானது விசாலமான நோக்கத்தைக் கொண்டுள்ளது, இது
சரித்திரத்தின் ஆரம்பம்முதல் இறுதிவரையுள்ள எல்லாவிதமா தேசத்து
மக்களையும் உள்ளடக்கியது,
விழுந்துபோன தூதர்களைப்போல.(Matt. 25:31–46; Rom. 14:10–12, (2 Pet. 2:4).).
கர்த்தர்மீது நம்பிக்கைகொண்டு, பாவத்திலிருந்து மனம்திரும்பி,
கர்த்தருடைய வழியில் நடப்போருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை,
ஆனால் நித்திய வாழ்விற்குள் அவர்கள் பிரவேசிப்பார்கள் (சங்கீதம்.1)
நியாயத்தீர்பின் பிரதானநோக்கம் தெரிவு செய்யப் பட்டவர்களாயிருந்து
இரட்சிப்பைக் கொற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் அனைவரும் கர்த்தருடைய
மகிமையைப்பெற்றுக் கொள்வார்கள்,
கர்த்தரைவெறுத்து அவர்வழிகளில் நடக்காதயாவரும்
ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவார்கள். (2 Thess. 1:3–10)
நியாயத்தீர்பு என்றால் என்ன?
நியாயத்தீர்ப்பு என்பது மனிதர்களின் தெரிவிற்கும் செயற்பாட்டிற்கும்
இறைவனால் கொடுக்கப்படும் பதிலாகும்.
நாங்கள் ஏன் நியாயந் தீர்க்கப்படுகிறோம்.?
கர்த்தர் பரிபூரணமானவர். அவர் மனிதவர்க்கத்தை சுயாதீனமாக சிந்தித்து
தன்னைத் தெரிவுசெய்வதற்கும், தள்ளிவிடுவதற்கும் பூரணசுதந்திரம்
கொடுத்துள்ளார், இந்த தெரிவுசெய்வதற்கு ஏற்ப நியாத்தீர்ப்பும் அமையும்.
நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்து யார் பாதுகாக்கப் படுவார்கள்?
இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர்வழியில் சீவிப்பவர்கள்
யாவரும் நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்தும் தண்டனையிலிருந்தும்
பாதுகாக்கப்படுவார்கள்.
எவ்வாறு ஜனங்கள் நியாயந்தீர்க்கப் படுவார்கள்?
பூமியில் வாழ்ந்த யாவரும் அதாவது மரித்தோரும் உயிருடன் இருப்போரும்
தங்கள் பாவத்திற்கு ஏற்ப இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது
நியாயந்தீர்க்கப் படுவார்கள்.
நியாயந்தீர்க்கப் படுவோர் எங்கு அனுப்ப்ப்படுவார்கள்?.
இயேசுக் கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டோர் தேவசமூகமாகிய
பரலோகத்திற்கும், பாவம் மன்னிக்கப்பாடாதோர் கந்தகமும் நெருப்பும்
காணப்படும் நரகத்திற்கு அனுப்ப்ப்படுவார்கள்.
கடைசி நாட்கள் என்றால் என்ன?
கடைசி நாட்கள் என்பது உலக சரித்திரத்தின் முடிவும், அவிசுவாசிகளுக்கான
இயேசுக்கிறிஸ்துவின் வருகையுமாகும், இது நியாயத்தீர்ப்பின் நேரமாகும்,
கிறிஸ்தவர்களாகிய நமக்கோ கலியாண நாளுக்கான பிரவேசிக்கும் நேரமாகும்.
கடைசி நாளைக்குறித்து நமக்கு யார் கூறுவார்கள்?
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டை எழுதியோரும்
கடைசிநாட்களை உணர்ந்து, கர்த்தருடைய பிள்ளைகள் அதற்காகத் தங்களை
ஆயத்தம்செய்யும்படி அந்த நாளைக்குறித்து விபரித்துக் கூறுகிறார்கள்
எப்பொது கடைசி நாள்கள் வரும்?
நாங்கள் கடைசிநாட்களில்தான் இருக்கின்றோம். இது கர்த்தராகிய
இயேசுக்கிறிஸ்துவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட
காலமாகும். இரண்டாம் வருகைக்குரிய நாளையம் நேரத்தையும் பிதாவைத்தவிர
வேறுயாரும் அறியார்கள்.
கடைசிநாள்கள் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையுடன் முடிவுறும்.
கடைசிநாள்களைக் குறித்து கர்த்தர் ஏன் எங்களுக்கு அறிவிக்கின்றார்?
எங்களுடைய பாவங்களிலிருந்து மனம் திரும்பும்படி போதிய அவகாசம் கர்த்தர்
எங்களுக்கு கொடுக்கின்றார். அத்துடன் சுவிஷேசத்தை மற்றவர்களுக்கு
அறிவிக்கும்படியும் கூறுகின்றார்.
கடைசிநாள்களில் நாம் எப்படி ஜீவிக்க வேண்டும்?
கடைசிநாள்களை நாம் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும்
எதிர்கொள்ளவேண்டும்.பரலோகத்தில் நாம் பெற்றுக் கொள்ளும் மகிமையை நாம்
இங்கு எதிர்கொள்ளும் உபத்திரபங்களுடன் ஒப்பிட்டு பார்க்கவேகூடாது.
வேதாகமத்தில் காணப்படும் " உபத்திரபங்கள் உங்களுக்கு உண்டு என்பதை இரண்டு
வகையாக வகுக்கலாம்.
1. விசுவாசிகளாக மாறிய பிற்பாடு இடம்பெறும் சோதகைள், உபத்திரபங்கள்.
2. 7 வருட உபத்திரபங்கள், அதாவது இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொள்ளாதவர்கள் மீது கர்த்தருடைய கோபாக்கினை உலகத்தின்மீது ஊற்றப்படும்
நாள்கள்.
கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தண்டிக்கும் வண்ணமாகவே
இந்த உபத்திரபகாலங்கள் அனுமதிக்கப் படுகின்றன.
விசுவாசித்து ஏற்றுக் கொண்டவர்களுக்கோ வாக்குத் த்த்தங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. (Rom 8:1)
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி
நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. சபையானது
நியாயத்தீர்ப்பைச் சந்திப்பதில்லை.
ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் சகலதும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து
கல்வாரிக் குருசினில் சிந்திய இரத்த்த்தினானே கழுவப்பட்டு , அவர்கள்
பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும். Rev 6:17
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது,
யார் நிலை
நிற்கக்கூடும் என்றார்கள்.
இந்த உபத்திரப காலம் விஷேடமாக கர்த்தரை ஏற்றுக் கொள்ளாதவர்களின்
இருதயத்தில் பயத்தை உருவாக்கி கர்த்தர் பக்கம் திரும்பம்படி
உருவாக்கப்பட்டது,
உண்மையில் மனம்திரும்பி இயேவை ஏற்றுக் கொள்வார்களாயின் அவர்களுக்கும்
சிலுவையில்தொங்கிய கள்ளனுக்கு கிடைத்த இரக்கம் அவர்களுக்கும்கிடைக்க
சந்தர்ப்பங்கள் உண்டல்லவா?
(Rev 9:20
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள்
பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்
பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவு மாட்டாதவைகளாயு மிருக்கிற
விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு
மனந்திரும்பவுமில்லை;
Rev 9:21
தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள்
வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும் பவுமில்லை. )