திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை அதிகாரம் 1 வசனங்கள் 5-6

5. உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்
ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

6. நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற
நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும்
உண்டாயிருப்பதாக. ஆமென்.

வச.5- மரித்தோரில் முதற்பிறந்தவர்:-

வேதத்தில் எலியா, எலிசா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பேதுரு, பவுல்
ஆகியோரால் மரித்தவர்கள் உயிர்பெற்றிருக்க இயேசுவை மரித்தோரிலிருந்து
முதற்பிறந்தவர் என்பது எப்படி?

மேலே மரணத்திலிருந்து உயிர்பெற்றெழுந்த அனைவரும் மீண்டுமாக மரணத்தை
சந்தித்து மீண்டும் மரித்து போனார்கள் எனவே இங்கு வசனம் கூறிவது
அழிவில்லாத உயிர்தெழுதல். இந்த அழிவில்லாத உயிர்தெழுதலில் முதலாவது
உயிர்தெழுந்தவர் இயேசுவே. உயிர்தெழுந்த இயேசு இனி மரிப்பதில்லை. எனவே
இயேசு மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் ஆவார்.

வச.6 - இராஜாக்களும் ஆசாரியர்களும்:-

இயேசு தமது இரத்ததினால் பாவங்களற நம்மை கழுவுகிறார்.

மேலும்,
நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக மாற்றுகிறார்.

இராஜாவாக இருந்தாலும் ஆசாரியனாக இருந்தாலும் அவன் அங்கிகாரம் பெற பிரதான
ஆசாரியன் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

நாமும் அங்கிகரிக்கப்பட்ட இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்க இயேசு கிறிஸ்து
நம்மை பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்து அங்கிகாரத்தை தருகிறார் (மத்
3:11).

மத்தேயு
3 அதிகாரம்

11. மனந்திரும்புதலுக் கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார்,
அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த
ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

குறிப்பு:-

ஒரு தேசத்திற்க்கு ஒருவனை இராஜாவாக ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கமே அவன்
அந்த தேசத்தை தன் கட்டுபாட்டில் வைத்து அதை அவன் ஆளுகை செய்ய வேண்டும்
என்பதே ஆகும்.

அதை போலவே கர்த்தர் நம்மை இராஜாக்களாக அபிஷேகம் செய்ததற்க்கும் பல
நோக்கம் உண்டு. அதில் ஒன்று இந்த உலகத்தை (மாம்சத்தை, பாவத்தை,
உலகத்துக்குரியதை) நம் கட்டுப்பாட்டில் வைத்து அதின் மேல் ஆளுகை செய்யவே
ஆகும். இராஜா தான் தேசத்தை ஆளுகை செய்ய வேண்டும் தேசம் இராஜாவை ஆளுகை
செய்யக்கூடாது.

அதே போல ஆசாரிய அபிஷேகம் எதற்க்காக என்றால் தேவனுடைய சமுகத்தில் நித்தம்
இருந்து ஆராதனை செய்வதற்காகவே ஆகும்.

அதே நோக்கத்திற்காகவே நம்மையும் இயேசு ஆசாரிய அபிஷேகத்தால் அபிஷேகித்து உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.