இறங்கியது போல் ஏறியிருந்தால் நீ
ஏறியது போல்
இறங்கியிருக்கலாம்"
ஒரு பிரபலம் செய்தியளிக்க மேடையேறினார். அவரை ஆஹோ ஓஹோவென்று புகழும்
மக்கள் வெள்ளத்தில் தன்னிலை மறந்தவராக பெருமை பார்வையை சுழற்றியவர் தனது
கோட்டு பாக்கெட்டில் கையைவிட்டு வெளியே எடுத்த வேகத்தில் ஏதோவொரு துண்டு
சீட்டு காற்றில் பறந்து பறந்தே போனது.
அட, அது தானே
பிரசங்கக் குறிப்பு...
விரல்களை இழந்த வீணைக் கலைஞனைப் போலத் துடித்துப்போன அவர் தலைகுனிந்து
அவமானத்துடன் இறங்கினார்.
அவரை எதிர்கொண்ட பண்பட்ட முதியவர்
இப்படி சொன்னார்,
|| இறங்கியது போல் ஏறியிருந்தால் நீ
ஏறியது போல்
இறங்கியிருக்கலாம். ||
- அதாவது
தாழ்மையுடன் நீ மேடையேறியிருந்தால் இப்படி அவமானத்தோடு இறங்காமல்
பெருமையுடன் இறங்கியிருக்கலாம்
என்பதே.
நன்றி:
சகோ.சாமுவேல் சர்ச்சில்