கன்னிப் பிறப்பு கற்பனையா? பாகம் 8

கன்னிப் பிறப்பு உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாதிடுவது போல, மாற்குவும் யோவானும்இயேசுவின் பிறப்பைப் பற்றி தங்களுடைய நற்செய்தி நூல்களில் குறிப்பிடாதது, இயேசுவின் கன்னிப் பிறப்பு நம்பகமானதல்ல என்பதற்கான சான்று அல்ல. இவர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டுமல்ல. அவருடைய பாலிய பருவத்தைப் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லையே. இதை வைத்துக் கொண்டு, இயேசுவுக்கு பாலிய பருவம் என்றொன்று இருக்கவில்லை என்று கூறமுடியுமா? எனவே இவர்கள் இருவரும் (மாற்குவும் யோவானும்) இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாதது, மத்தேயுவும் லூக்காவும் எழுதியுள்ளது போல இயேசுவின் பிறப்பு நிகழவில்லை என்பதற்கான ஆதாரமாகிவிடாது. மேலும், பேதுருவி்ன பிரசங்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவின் சுவிஷேசம் பேதுருவின் பிரசஙகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவி்ன் சுவிசேஷம். பேதுருவின் பிரசங்கத்தில் கன்னிப்பிறப்பு இடம் பெறாமைக்கான காரணம், றொகர்ஸ் சுட்டிக்காட்டியதுபோல, “மரியாள் அக்காலத்தில் உயிரோடிருந்தமையும், இயேசுவின் பிறப்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தமையுமேயாகும்.“ எனினும் மக்களுடைய வாயிலிருந்துகூட இயேசுவை யோசேப்பின் மகன் என கேட்க விரும்பாத மாற்கு, மக்களுடைய கருத்தை எழுதும்போது இயேசுவை “மரியாளின் குமாரன்“ (மாற். 6:3) என குறிப்பிட்டுள்ளமை, மாற்கு இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தார் என்பதையே புலப்படுத்துகின்றது. மாற்குவைப் போலவே யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதவில்லை. காரணம் மற்றைய மூன்று நற்செய்தி நூல்களும் எழுதப்பட்ட பின்பே யோவான் தன்னுடைய நூலை எழுதினார். .இதனால் மக்கள் அறிந்திருந்த விடயங்களை மறுபடியுமாக எழுதுவதை அவர் தவிர்த்துள்ளார். மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பைப் பற்றி தேவையான அனைத்துயும் ஏற்கனவே எழுதியிருந்தமையினால் யோவான் அவற்றை மறுபடியுமாக தன்னுடைய நூலில் சேர்த்துக் கொள்ளவில்லை. றொகர்ஸ் இதைப் பற்றி விளக்கும்போது “மக்கள் அறிந்தவற்றை மறுபடியுமாக எழுதுவது அவசியமற்றது. மற்றைய நற்செய்தி நூல்களில் இடம்பெறாதவைகளை எழுதிய யோவான் அவைகளில் உள்ளவற்றை மறுத்துரைக்கவுமில்லை. மட்டுல்ல. அக்காலத்தில் மக்கள் கன்னிப்பிறப்பு ஏற்றுக் கொண்டிருந்தமையால் அதைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கவில்லை“ என்று அறியத் தந்துள்ளார். எனினும் ஆதியிலிருந்தே தேவனோடு இருந்த வார்த்தை (1:1)மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். (1:14)என இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிவிக்கும் யோவான் இயற்கைக்கும் அப்பாற்பட்ட முறையில் இயேசு உலகிற்கு வந்ததை பல்வேறுப்பட்ட முறைகளில் வர்ணித்துள்ளார். ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியது போல“பரலோகத்திலிருந்து வருகிறவர் (3:31) வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம் (6:51)தேவனால் அனுப்பப்பட்டவர்(3:34) போன்ற சொற்பிரயோகங்கள் அவருடைய பிறப்பு சாதாரணமானதல்ல என்பதையே அறியத்தருகின்றன.“ மேலும், “இயேசு சிலுவையிலறையப்பட்டதிலிருந்து, மரியாள், கடைசிவரை யோவானுடைய பாரமரிப்பில் இருந்துள்ளமையால் (யோவான 19:26-27) யோவான் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறியாதிருந்தான் என வாதிடுவது அர்த்தமற்றது“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். யோவானைப் போலவே அப்போஸ்தனாகிய பவுலும் இயேசுவின் இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பை வர்ணித்துள்ளார். “.இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்( 1 கொரி. 15:47)தாவீதின் சந்ததியில் பிறந்தவர் (ரோமர் 1:5) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 தீமோ. 3:16)என இயேசுவைப் பற்றி எழுதியவர், அவருடைய கன்னிப் பிறப்பைக் குறிப்பிட,“காலம் நிறைவேறின போது ஸ்திரியினிடத்திற் பிறந்தவர் (கலா. 4:5)என அறியத் தந்துள்ளார். நற்செய்தி நூலாசிரியர் லூக்காவின் நண்பான இருந்த பவுல், லூக்காவின் மூலமாக இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி அறிந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அனைவருமே இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.அவர்கள் இதைப் பற்றி அதிகம் எழுதாதபோதிலும் அவரக்ள் எழுதியுள்ளவைகள் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாக உள்ளன.அனைவருடைய குறிப்புகளிலும் காணப்படும் ஒற்றுமை, இவ்வுபதேசத்தைப் பற்றி சந்தேகப்படுவது அவசியமற்றதும் அர்த்தமற்றதுமான செயல் என்பதையே அறியத தருவதாயுள்ளது. கன்னிபிறப்பு உபதேசம் நம்பகமானது என்பதற்கு, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் குறிப்புகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றுதலாக இது இருப்பதும் மேலதிகமானதொரு ஆதாரமாக அமைகின்றது. மேசியா இவ்வுலகிற்கு எவ்வாறு வருவார்எனபழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் முன்னறவித்திருந்தனவோ, அதேவிதமாக இயேசு மனிதனாக இவ்வுலகுகக்கு வந்துள்ளதை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம்.இயேசுவின் மானிட பிறப்பைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனம் ஆதியாகமம் 3:15 இல் உள்ளது. இதில் இயேசுகிறிஸ்து“ஸ்திரியின் வித்தாக“குறிப்பிடப்பட்டுள்ளார். ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக்காட்டியது போல,“இயேசுகிறிஸது ஸ்திரியின் வித்தாக இவ்வுலகிற்கு வந்தாரேயன்றி, பொதுவாக இனப்பெருக்க முறையின்படியான ஆணின் வித்தின் மூலமாக அல்ல“அதேபோல மேசியாவின் பிறப்பைப் பற்றிய இன்னுமொரு தீர்க்கதரிசனப் பகுதியானமீகா 5:2-3 இலும் பெத்லகேமில் பிறக்கும் இஸ்ரவேலை ஆளும் பிரபுவினுடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது, ஆனாலும் பிரசிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் அவளை ஒப்புக்கொடுப்பார்“என காணலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.