சிலுவை தியான செய்தி கல்வாரி மரத்தில் பூத்த ஏழு பூக்கள் 6

6) அர்ப்பணிப்பு

இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து
ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் நித்திய
நரகத்திற்கு நேராக போய் கொன்டு இருந்த நம்மை மீட்கும் படி தன்னையே பலியாக
கொடுக்கும்ப்படியே....

அதை முறியடிக்க பிசாசு, வலுசர்ப்பம், அலகை, இப்படி பல பெயருடைய
தந்திரமுள்ள இந்த உலகத்தின் அதிபதி முயற்சி செய்தான்.

ஆனாலும் ஆண்டவர் எல்லாவற்றையும் முறியடித்து இறுதியில் பிதாவின்
சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்.

ஆக ஆண்டவரின் முடிந்தது என்ற இந்த வார்த்தை ஒரு சோகவார்த்தையல்ல. அது ஒரு
வெற்றியின் வார்த்தை.

ஆம் சிலுவையில் வெற்றி சிறந்த நேசரின் வெற்றிக்குரல்.
நம்முடைய பாவங்களுக்கு மீட்பு இல்லை என்பது இத்தோடு முடிந்தது.

நம்க்கு நித்திய ஜிவன் இல்லை என்ற வார்த்தை இத்தோடு முடிந்தது.

எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது.

அவருடைய மரணத்தை குறித்தான தீர்க்கதரிசனங்கள் முடிந்தது.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிளவு இனி முடிந்தது.

யூதர் பிற இனத்தார் என்ற பிரிவு இனி முடிந்தது.

மனிதனின் பாவங்களுக்கும் நோய்களுக்கும் பரிகாரம் உண்டாக்கி முடிந்தது.

நம்முடைய ஜெபங்களுக்கு தடையாக காணப்பட்ட எல்லா காரியங்களும் இனி முடிந்தது.

சத்தானின் அதிகாரம் இனி முடிந்தது.

எல்லாம் எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது.

எனவே தான் ஒரு வெற்றியின் குரல் என்கிறேன்.

அது ஒரு கிழ்படிதலின்
குரலும் ஆகும்.

நம் வாழ்கையிலும் இந்த வெற்றியின் குரல் தொனிக்க சிலுவையில் தொங்கும்
இயேசுவை நோக்கி பார்ப்போமா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.