1. ஏழைகளைப் பார்த்துப்
புன்முறுவல் பூக்கக்
கற்றுக்கொள்ளுங்கள்.
அன்போடும்
மரியாதையோடும்
அவர்களிடம் பேசுங்கள்.
2. அவர்களது பெயரைக்
கேட்டு அவர்கள் குடும்பம்
மற்றும் இல்லத்தைப் பற்றி
விசாரியுங்கள். அவர்கள்
தங்குமிடத்திற்கு விஜயம்
செய்யுங்கள்.
3. பயணத்தின்போது
கொடுக்க ஏழைகளுக்காகக்
கூடுதல் ஒன்றிரண்டு
சாப்பாட்டுப்
பொட்டலங்களை
எடுத்துக்கொள்ளுங்கள்.
4. சொந்தக் காரில் பயணம்
செய்யும்போது சில
பழைய, புதிய
ஆடைகளைக் கொண்டு
செல்லுங்கள். அனேகமாக
வழியில் சில ஏழைகளைச்
சந்திப்பீர்கள்.
5. உதவியற்றோருக்கு
முகமலர்ச்சியுடன் கடன்
கொடுங்கள்.
6. விதவைகள், பெண்கள்,
முதியவர், பெண்
குழந்தைகள்
போன்றோருக்கான
அரசாங்கச் சலுகைகள்
மற்றும் வங்கிக் கடன்களை
விசாரித்தறிந்து
ஏழைகளுக்கு அவை
கிடைக்கச் செய்யுங்கள்.
7. தொழுநோயாளர்,
முதியோர், அநாதைகள்,
மனவளர்ச்சி குறைந்தோர்,
ஊனமுற்றோர், ஊமை,
செவிடர் மற்றும் குருடர்
இல்லங்களைக்
குறித்து விவரங்கள்
சேகரித்து ஏழைகளை
அங்கு சேர்த்துவிடுங்கள்.
இப்படிப்பட்ட சில
இல்லங்களுக்குக்
கிரமமாகச் சென்று உதவி
செய்யுங்கள்.
8. ஏழை மாணவர்
படிப்பிற்குக் கல்விக்
கட்டணம்
கொடுத்துதவுங்கள்.
9. ஏழை மாணவருக்கு
இலவச ட்யூஷன் எடுங்கள்.
கல்வியறிவற்றோருக்கு
எழுதப்படிக்கக்
கற்பியுங்கள். இளைஞர்
முதியோருக்குங்கூட
சேரிகளில் கிரமமான
வகுப்புகள் துவங்கலாம்.
10. பன்னிரண்டு
வயதுக்குட்பட்ட ஏழைப்
பிள்ளைகளைத்
தத்தெடுத்து
கடவுளுக்காக வளர்க்கலாம்.
பிள்ளைகள் உடையவரும்
தத்தெடுக்கத்
தடையில்லை!
11. திக்கற்றோருக்கு ஒரு
கருணை இல்லம்
நடத்துங்கள்.
12. கல்கத்தாவிலுள்ள
அன்னை தெரசாவின்
கருணை இல்லத்தைப்
பார்த்து வாருங்கள்.
அவர்களது மிஷனரிகளின்
இல்லம்
அண்மையில்எங்குள்ளதோ
அங்கே சென்று கூடிய
உதவி வாக்களியுங்கள்.
13. அரசு
மருத்துவமனைகளுக்குச்
சென்று நோயாளிகளைச்
சந்தியுங்கள். அவர்கள்
சரியான சிகிச்சை
பெறுகிறார்களா என்று
பாருங்கள். இல்லையேல்
மருத்துவர்களைச்
சந்தித்து ஆவன
செய்யுங்கள். குழந்தைகள்
பிரிவிலுள்ள மிகச்
சுகவீனமான
குழந்தைகளுக்கு
விளையாட்டுச்
சாமான்கள் கொடுங்கள்.
14. ஏழைகளைச்
சிகிச்சைக்கு
மருத்துவர்களிடம்
கூட்டிச் செல்லுங்கள்.
15. விதவைகள் மற்றும்
ஏழைப் பெண்களுக்கு
விவாகம் செய்து
வையுங்கள்.
16. உங்கள்
அண்மையிலுள்ள வறிய
குடும்பமொன்றைத்
தெரிந்துகொண்டு
அவர்கள் வாழ்வை
முன்னேற்றுங்கள்.
17. எளியவரின் உரிமைகள்
மற்றும் வழக்குகளுக்காக
வாதாடுங்கள்.
எடுத்துக்காட்டாக, அவர்கள்
நிலம்
அபகரிக்கப்படும்போது
தலையிடுங்கள்.
18. பிச்சைக்காரருக்காக
ஆண்டொருமுறையாவத
ு ஒரு நற்செய்திக் கூட்டம்
நடத்தி நல்லதொரு
உணவளியுங்கள்.
19. உங்கள் பிறந்தநாள்,
திருமண நாளன்று
ஏழைகளை அழைத்து
உணவளியுங்கள்.
20. நிறைய பலகாரங்கள்
செய்து அல்லது வாங்கி
பண்டிகைக் காலங்களில்
வீட்டிற்கு வரும்
ஏழைகளுக்குக்
கொடுங்கள்.
21. ஆலயத்திற்கு
வெளியே தருமம் வாங்கக்
காத்து
உட்கார்ந்திருப்போருக்கு
ஒரு சுருக்கமான
ஞாயிறு ஆராதனை
நடத்துங்கள்.
22. எளிய குடும்பம்
ஒன்றை எங்காவது
விடுமுறைக்கு
அழைத்துச் செல்லுங்கள்.
23. தோட்டத்தில்
விளையும் சிலவற்றை
ஏழை எளியவருக்காகப்
பிரித்து வையுங்கள்.
24. பரண்கள், பெட்டிகள்,
அலமாரிகள், அடுக்குத்
தட்டுகளைச் சுத்தம்
செய்து ஓராண்டிற்கு
மேலாகப் பயன்படுத்தாத
பொருட்களைக்
கொடுத்து விடுங்கள்.
25. சேரிகளில் கிறிஸ்து
ஜெயந்தி பாடல்களைப்
பாடிக்கொண்டு சென்று
தள்ளப்பட்டோருக்குவாழ்த்த
ுதல் அட்டைகளும்
இனிப்பும் கொடுத்து
வாழ்த்துங்கள்.
26. குட்டிக் குட்டி
விளையாட்டுச்
சாமான்கள், பலூன்கள்
போன்றவற்றை மொத்த
விற்பனைக் கடையில்
வாங்கி
வைத்துக்கொண்டால்
ஏழைச்
சிறுவர் சிறுமியர்
கண்ணில்படும்போது
கொடுத்து
மகிழ்விக்கலாம்.
27. பணக்காரருக்கு
வெகுமதிகளைக்
கொடுத்து
அவர்களிடமிருந்து
வெகுமதிகளை வாங்கிக்
கொள்ளும் பழக்கத்தை
நிறுத்தி அப்பணத்தை
ஏழைகளுக்குத்
திருப்புங்கள்.
28. சேரிவாழ் மக்களுக்குக்
கழிவறைகள் கட்டிக்
கொடுங்கள்.
29. உங்கள் வருமானம்
மற்றும் சொத்தில் பத்தில்
ஒன்றை ஏழைகளுக்காக
ஒதுக்கி வையுங்கள்.
30. ஏழைகளுக்குத்
தொண்டு செய்யும் ஒரு
நிறுவனத்திற்கு உங்கள்
பணத்திலும் சொத்திலும்
ஒரு பகுதி உயில்
எழுதி வையுங்கள்.
31. கைக்கு வரும்
சில்லரைக்காசு
யாவற்றையும்
வறியவருக்கென்று
ஒதுக்கி வையுங்கள்.
32. அதிகபட்சம் 10 நல்ல
ஆடைகளும் 10 சாதா
உடைகளும் வைத்துக்
கொண்டு மற்றவற்றைத்
தேவைப்பட்டோருக்குக்
கொடுத்துவிடுங்கள்.
33. ஏழை
வியாபாரிகளிடம் பேரம்
பேசாதீர்கள்.
34. திருமண
அன்பளிப்புகளில் ஒரே
பொருள் ஒன்றிற்கும்
அதிகமாக வந்தால்
அவற்றைக் கடைகளில்
மாற்றாமல்
பாவப்பட்டவருக்குக்
கொடுங்கள்.
பிள்ளைகளுக்கு,
பேரப்பிள்ளைகளுக்கென்ற
ு சேமித்து
வைக்காதீர்கள்.
35. பிள்ளையின்
உடைகளை அடுத்த
பிள்ளைக்கெனப்
பத்திரப்படுத்தும்
பழக்கத்தை
விட்டொழியுங்கள்.
அடுத்தப் பிள்ளை
புதுத்துணிதான்
போடட்டுமே!
36. பழைய புத்தகங்களை
ஏழைகளுக்கு
விநியோகியுங்கள்.
37. இரப்போர் தங்கும்
இடங்களில் பாடல்
நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.
38. உணவுப் பொட்டலங்கள்
தயாரித்து பிச்சைக்காரர்
தங்குமிடங்களில்
விநியோகியுங்கள்.
விருந்து நாட்களில்
பிரியாணி போன்றவை
மீதமானால்
உறவினருக்குக்
கொடுத்தனுப்பாமல்
ஏழைகளுக்குக்
கொடுத்துவிடுங்கள்.
39. தங்க
இடமில்லாதோருக்குக்
குடிசைகள் கட்டித்
தாருங்கள்
40. எளியோரின் இடிந்த
வீடுகளைச் சரிசெய்து
உதவுங்கள்.
41. திக்கற்றோரைச்
சந்தித்து அவர்கள் வீட்டைச்
சுத்தம் செய்து
நல்லதொரு உணவு
சமைத்துக் கொடுத்து
வாருங்கள்.
42. தினந்தோறும்
பிச்சைக்காரரைச்
சந்திப்பது உங்கள்
வேலைக்கு
இடையூறானால்
ஒவ்வொரு மாதத்தின்
முதல் தேதி அல்லது
முதல் ஞாயிறு
அவர்களை வரப் பழக்குங்கள்.
அப்பொழுது
அவர்களுக்குப் போதித்து,
தருமம் கொடுத்து,
ஜெபித்து அனுப்பலாம்.
43. எளிமையான
வாழ்க்கை முறையைப்
பின்பற்றினால்
வறியவருக்குக் கூடுதல்
செலவழிக்கலாம்.
44. சேரிப்
பிள்ளைகளுக்கு
விளையாட்டுகள் மற்றும்
போட்டிகள் நடத்துங்கள்.
ஷட்டில் காக், கால்பந்து,
கேரம் போர்ட், செஸ் போர்ட்
போன்றவை
வாங்கிக் கொடுங்கள்.
ஊஞ்சல் போன்ற சிலவற்றைப்
பொருத்திக் கொடுங்கள்.
45. நீங்கள் மருத்துவர்
அல்லது தாதியரானால்
ஆதிவாசிக் கிராமங்கள்
மற்றும் அவைபோன்ற
இடங்களில் தங்கி, உங்கள்
அறிவையும்பயிற்சியை
யும் பயன்படுத்தி மக்களை
உங்களுக்குத் தெரிந்த
வழிகளிலெல்லாம்
முன்னேற்றுங்கள்.
46. எளியவரின்
வீடுகளுக்கு விஜயம்
செய்து அவர்களது
நண்பராயிருங்கள்.
அவர்களது திருமணங்கள்,
மரணங்கள் மற்றும் பிற
வைபவங்களில்
கலந்துகொள்ளுங்கள்.
47. பொறுமையாய்
எளியவரது அவல
நிலையின் சோகக்
கதைகளைக்
காதுகொடுத்துக் கேட்க
நேரமெடுங்கள்.
48. தேய்ந்த செருப்பு
மற்றும் கிழிந்த
உடைகளைச்
செப்பனிட்டுப்
பயன்படுத்தாமல்
ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டால்
அவர்கள் சில மாதங்கள்
அவற்றை
அனுபவிக்கலாமே.
49. சாலையோரத்தில்
யாரேனும் விழுந்து
கிடப்பதைக் கண்டால்
நில்லுங்கள்.
உயிரோடிருக்கிறாரா
என்று பாருங்கள்.
செத்திருந்தால் நல்லடக்கம்
செய்ய நகராட்சிக்கு
அறிவியுங்கள்.
உயிருடனிருந்தால்
ஆவன செய்து உதவுங்கள்.
50. விருந்தினர் மற்றும்
அயலகத்தார் உங்கள்
வீட்டிற்குக்
கொண்டுவரும்
பலகாரங்களை
அவசியமாய்த் தின்றுத்
தீர்க்கவேண்டுமென்பது
கட்டாயமல்ல. பகிர்ந்து
தின்றால் பசியாறும் !
(இக்கட்டுரையை நகல்
எடுத்து
விநியோகிக்கலாம்)
டாக்டர் திருமதி
லில்லியன் ஸ்டான்லி
ச
