கன்னிப் பிறப்பு கற்பனையா?பாகம் 1

என்

கன்னிப் பிறப்பு கற்பனையா?பாகம் 1








இக்கட்டுரை
*.கன்னிப் பிறப்பின் அவசியம் *.கன்னிப்பிறப்பிற்கான சாத்தியபாடுகள் *.மத்தேயுவினதும் லூக்காவினதும் வம்ச அட்டவணைகளில் காணப்படும் முரண்பாட்டிற்கான விளக்கங்களையும் அலசுகிறது 

கிறிஸ்தவ மார்க்கத்தின் மூலஉபதேசங்களில் மாம்சமாகிய இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பும் ஒன்றாகும். ஆதிச் சபையினது விசுவாசப் பிரமாணங்கள் அனைத்திலும் இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்தவ சபைகளில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. சபைப் பிதாக்களும் (Church Fathers) தங்கள் எழுத்தாக்கங்களில் இவ்வுபதேசத்தின் சத்தியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வந்தனர். கன்னிப் பெண்ணான மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து, பாவமற்ற தெய்வீகக் குழந்தையாக இயேசு பிறந்தார் என்பதை மறுத்துரைக்கவோ, எதி்ர்த்துப் பேசவோ எவரும் துணியவில்லை.இவ்வுபதேசத்திற்கு முரணமாக பேசுவது , பரிசுத்தாவியானவருக்கு விரோதமான பாவமாகவும் கருதப்பட்டது. ஒருசில வேதப்புரட்டர்களும் இவ்வுபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமலிருந்தனர். இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் ப்றறிய தன்னுடைய 397 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலில் 43 பக்கங்களை 2ம் நூற்றாண்டில் இவ்வுதேசத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைப் பற்றி ஆராய்வதற்கு ஜே.ஜி. மெக்ஹேன் என்பார். இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கையாக கன்னிப் பிறப்பு உபதேசம் சகல சபைகளினாலும் கருதப்பட்டது. என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. தத்துவங்கள், கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையினாலன்றி சரித்திர பூர்வமான பாரம்பரியங்களின் அடிப்படையில், எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.“ என அறியத் தந்துள்ளார். மற்றைய உபதேசங்களைப் போலல்லாது.





கன்னிப்பிறப்பு உபதேசமானது அதிக சர்ச்சைகள் இன்றி கி.பி. 381 ல் நெறிப்படுத்தப்பட்ட நைசீய விசுவாசப் பிரமாணத்திலும் (Nicene Creed) கி.பி. 390 இன் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்திலும் (Apostle's Creed) கி.பி. 451 இல் சால்சிடோன் விசுவாசப் பிரமாணத்திலும் (Chacedon Creed) திருச்சபையின் பொதுவான நம்பிக்கைகளுள் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, இன்றுவரை திருச்சபையால் உபயோகிக்கப்பட்டும் வருகிறது. 1909 இற்கும் 1915 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்படட மூலஉபதேசங்கள் (Fundamentals), “உண்மையான திருச்சபையின் நம்பிக்கைகளுள் கன்னிப்பிறப்பு உபதேசமும் இருக்க வேண்டும்“ என வலியுறுத்தியது. இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பானது, ஆதிகாலமுதலே திருச்சபையால் ஏகமானதாக எற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், அண்மைக்காலங்களில், இவ்வுபதேசத்தை முழுமையாகவும், சொல்லத்தத்தினடிப்படையிலும் (literally) நம்பாதவர்களாகவே அநேக இறையியலாளர்கள் (Theologians) இருக்கின்றனர்.என்பதை அவர்களது கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கன்னிப்பெண் கர்ப்பிணியாக இருக்க முடியாது என வாதிடும் அறிவியலாளர்கள் (Intellectuals) இயேசுகிறிஸ்துவின் பிறப்பிலுள்ள இயற்கைக்கும் அப்பாற்பட்ட “அற்புத தன்மையை“ ஏற்க மறுப்பவர்களாக,, இவ்வுபதேசம் கற்பனைக் கதையை அடிப்படையாகக் கொண்டது எனும் முடிவிற்கு வந்துவிட்டனர்.சிலர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளையே இயேசு என எண்ணுகின்றனர். அநேக கிறிஸ்தவர்கள், உருவக மொழியின் (Figure of Speech) அடிப்படையிலேயே இவ்வுபதேசத்தை விளக்க வேண்டும் என வாதிடுகின்றனர். விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதனுடைய அறிவு அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளமையால். எதற்கும் காரணகாரியங்ளைக் கண்டறிந்து, தனது அறிவுக்கு ஏற்புடையதாய் இரு்பபவைகள் மட்டுமே உண்மை, மற்றையவை அனைத்து் கற்பனைக் கதைகள், மூடக்கொள்கைகள் எனும் முடிவுக்கு மனிதன் வந்துவிட்டமையே, கன்னிப்பிறப்பு உபதேசத்தை நம்பாமல் இருப்பதற்கான காரணமாகும். உண்மையில் இவவுதேசம் மானிட அறிவுக்கு முரணாகவும் எதிராகவுமே உள்ளது. காரண காரியங்களின் அடிப்படையிலோ அல்லது ஆராய்ச்சி பரிசோதனை என்பவைகளின் முடிவின்படியோ விளங்கிக்கொள்ளக்கூடிய உபதேசமல்ல. இது மாறாக, பொய்யுரையாத தேவனுடைய (தீத். 1:3) ஆவியினால் அருளப்பட்ட தேவவார்த்தைகளை (2 தீமோ. 3:16) விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சத்தியமாகும். எனினும் இவ்வுபதேசதம் புராணக்கதையல்ல.





இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்புவது அறிவீனமான செயல் அல்ல. ஏனெனில் இது பின்தங்கிய மூடக்கொள்கைகளுடைய விஞ்ஞான அறிவற்ற காலத்து மனிதனுடைய கற்பனையல்ல. மாறாக மானிட சரித்தரத்தில், குறி்ப்பிட்ட காலத்தில் நடைபெற்ற மனிதனுடைய அறிவுக்கு எட்டாத உண்மைச் சம்பவமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.