1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
மத்தேயு 6:14 ல்
அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா
உங்களுக்கும் மன்னிப்பார்.
பொதுவாக இன்றைய நாட்களில் நாம் பல வாக்குறிதிகளை விடுகின்றோம் பலவற்றை
பேசுகிறோம் ஆனால் நாம் பேசுவதற்கும் நமது வாக்குறிதிகளுக்கும் நமது
வாழ்க்கையில் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் அருள்நாதர் தன்னுடன் இருந்த மக்களுக்கு கூறினார் அதேபோல் அவர்
மன்னித்தது மட்டுமல்ல பிதாவிடம் மன்னிப்பதற்காக பரிந்து பேசுவதையும்
பார்க்கிறோம்
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்
சிறுவயதில் நாம் தவறுகள் செய்யும் போது தாத்தா பாட்டி , அப்பா அம்மாவிடம்
சொல்லுவார்கள் அவன் தெரியாம செய்துவிட்டான். விட்டுவிடு என்று.
அதுபோலதான் நம் தேவன் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார்.
காரணம் என்ன?
அவர்கள் அறியாமல் செய்தது. அதனால் தான் கூறுகிறார் தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே.
இன்று நாம் அறிந்து இயேசுவை தினம்தோறும் சிலுவையில்
அறைந்து
கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற
வேண்டியவர்களாக காணப்படுகின்றோம்.
வேதம் நமக்கு சொல்கிறது.
நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே
செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை" என்று பிரசங்கி 7:20 ல் பார்க்கிறோம்.
"நமக்கு
பாவமில்லை
யென்போமானால் நம்மை நாமே வஞ்சிகிறவர்களா
யிருப்போம் சத்தியம் நமக்குள் இராது." என்று
1யோவான் 1:8 ல் பார்க்கிறோம்.
இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
தேவன் அன்புள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் - நம் பாவங்களை மன்னிக்க தயை
பொரிந்தினவராகவும் இருக்கிறார்.
"ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும்
மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவரா
யிருக்கிறார்" என்று நமக்கு
2 பேதுரு 3:9 சொல்கிறது.
நமது பாவங்களுக்கான சரியான தண்டனை மரணமே. "பாவத்தின் சம்பளம் மரணம்"
என்று ரோமர் 6:23 ல் பார்க்கிறோம்.
நாம் நமது பாவங்களினால் சம்பாதித்தது நித்திய மரணம் ஆகும். ஆனால் தேவன்
தமது பரிபூரண திட்டத்தில், இயேசுகிறிஸ்துவாக மனிதனானார். நமது
பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது
மரித்தார்.
"நாம் அவருக்குள் தேவனுடைய
நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" என்று
2கொரிந்தியர் 5:21 ல் பார்க்கிறோம்.
நமது பாவங்களுக்கு தண்டனையான மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டு சிலுவை மீது
மரித்தார். நமக்கு மாத்திரமல்ல முழு உலகத்தின் பாவத்திற்கும் மன்னிப்பை
இயேசுவின் மரணம் அளித்தது.
"நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே, நம்முடைய
பாவங்களை மாத்திரம் அல்ல. சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்கிற
பலியாயிருக்கிறார்" என்று 1யோவான் 2:2 ல் பார்க்கிறோம்.
நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட
வேண்டுமென்று விரும்புகிறீர்களா?
மீளமுடியாதபடித்தோன்றும் குற்ற மனப்பான்மையால் வேதனைப் பட்டுக்
கொண்டிருக்கிறீர்களா?
இதோ நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டு கல்வாரியில் தொங்கும்
இயேசுவை நோக்கி பார்ப்போமா?
"அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய (இயேசுகிறிஸ்துவின்)
இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு
உண்டாயிருக்கிறது" எபேசியர் 1:7