சங்கீதம் 19:4-6,இல் சூரியன் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் ஓடுவதாகவும்
சங்கீதம் 104:19இல் சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது. இதன் விளக்கத்தைத் தரவும்.
-கே. சுந்தரம்
வேதாகம ஆசிரியர்கள் தாங்கள் வாழும் உலகைப் பற்றி எழுதும்போது மானிட
கண்களுக்குத் தென்படும் விதமாகவே காட்சிகளை வர்ணித்துள்ளனர். இதனால்
அவர்கள் தம் கண்களுக்குத் தென்பட்ட விதமாக சூரியன் உதிப்பதையும்
மறைவதையும் பற்றி வேதாகமத்தில் எழுதியுள்ளனர்.
சங்கீதப் புத்தகம் மூலமொழியில் கவிதை நடையில்
எழுதப்பட்டுள்ளமையால் சூரியன் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை ஓடுவதாகவும்
தீவிரித்து செல்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து வேதாகம ஆசிரியர்கள் புவிச் சுற்றுகையை
அறியாதவர்களாக தவறான முறையில் சூரியனைப் பற்றி எழுதியுள்ளதாக நாம் கருதலாகாது.
ஏனென்றால் இன்றைய
21ம் நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாமும் இதேவிதமாக, நம்
கண்களுக்குத் தென்படும் வண்ணம் இயற்கைக் காட்சிகளை வர்ணிப்போம்.
பூமி தன்னைத் தானே சுற்றுவதனாலேயே இரவும் பகலும் மாறி மாறி வருகின்றது
என்பதை நாம் நன்கறிந்திருந்தாலும்,
காலையில் எழுந்த்தும் ஆகா என்ன அருமையான புவிச்சுற்றுகை என்று சொல்ல மாட்டோம்.
மாறாக என்ன அருமையான சூரியோதயம்என்றே சொல்வோம்.
சூரியன் உதித்து மறைந்தல் எனும் சொற்பிரயோகத்தை இன்று நாம் எவ்விதமாக
உபயோகிக்கின்றோமோ அதேவிதமாகவே வேதாகம ஆசிரியர்களும் உபயோகித்துள்ளனர்
சங்கீதம் 19:4-6,
4. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக்
கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 104:19
5. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து,
பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை
வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
சங்கீதம் 19:4-6, சங்கீதம் 104:19 இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது தானே!
0
March 24, 2016
Tags